கவிதைகள்

Dec 29, 2012

நான் ரசித்த பிரமிள், ஆத்மாநாம், கல்யாண்ஜி மற்றும் கலாப்ரியாவின் கவிதைகள் உங்களுக்காக...

Read More...

பழந்தமிழர்களின் வாணிகம்

Dec 20, 2012


தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல் வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் சிறப்படைந்திருந்தார்கள் என்பதற்குத் தமிழிலக்கியச் சான்றுகள் மட்டுமல்லாமல் வெளி நாட்டாரின் பழங்காலக் குறிப்புகளின் சான்றுகளும் உள்ளன.

கி.மு. பத்தாம் நூற்றாண்டின் அரசனாகிய சாலமனுக்குத் தமிழ்நாட்டுக் கப்பல்கள் மயில் தோகையும் யானைத் தந்தமும் வாசனைப் பொருள்களும் கொண்டு சென்றன. பழைய ஈப்ரூ (Hebrew) மொழியில் உள்ள துகி (மயில் இறகு) என்னும் சொல்தோகைஎன்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு.

அஹலத்” (வாசனைப் பொருள்) அகில் என்னும் தமிழ்ச்சொல் திரிந்து அமைந்தது.

ஆங்கிலத்தில் உள்ள சாண்டல் (Sandalwood), ரைஸ் (Rice) என்னும் சொற்கள் கிரேக்க மொழியின் வாயிலாகப் பெறப்பட்ட பழைய தமிழ்ச் சொற்களாகிய சந்தனம் (சாந்து). அரிசி என்பவற்றின் திரிபுகளே. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயிலும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவுக்குக் கடல்வழியாகச் சென்றன


Read More...

மருதாணி

Dec 9, 2012



மருதாணி.. இந்த வார்த்தையைக் கேட்டாலே அவ்ளோ சந்தோசமா இருக்கும் சின்ன வயசுல. அப்பமெல்லாம் இலையை அரைச்சு வைக்கிற மருதாணி தான். எல்லார் வீட்டுலயும் மருதாணி மரம் இருக்காது. எங்கயாவது தான் இருக்கும். யாரு வீட்டுத் தோட்டத்துக்குப் போனாலும் அங்க மருதாணி மரம் நிக்கானு தான் கண்ணு அலைபாயும்.
Read More...

தமிழும் மலையாளமும்

Dec 6, 2012


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் – இந்த நான்கு திராவிட மொழிகளுக்குள் இன்றும் ஏறத்தாழ ஐந்தாயிரம் சொற்கள் பொதுவாக உள்ளன! இலக்கணக் கூறுகள் பல பொதுவாக உள்ளன. சமஸ்கிருத மொழியின் கலப்பால் ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பே கன்னடமும் தெலுங்கும் தமிழ் மொழியிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டன. ஆனால் மலையாளமும் தமிழும் அவ்வளவு மிகுதியாக வேறுபடவில்லை. கேரளத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் அதிகமாயிற்று. அதற்குமுன் தமிழ் அங்கே ஆட்சி மொழியாகவும் கலைமொழியாகவும் இருந்து வந்தது.

கேரள நண்பர்கள் மலையாளம் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? கூர்ந்து கவனித்தால் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்து பேசுவது தான் மலையாளம் எனத் தோன்றும் :-)
பதினைந்து நூற்றாண்டுகளுக்குமுன் ஆண்டுவந்த சேர மன்னர்கள் ‘தமிழ்’ அரசர்கள். அதற்குப் பிறகு பாண்டிய அரச மரபைச் சார்ந்த தமிழ் அரசர்களே ‘பெருமான்கள்’, ’பெருமக்கன்மார்’ என்ற பெயரோடு அங்கே பத்தாம் நூற்றாண்டுவரையில் ஆண்டுவந்தார்கள். தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்டபோது தலைவராக இருந்த ‘திருவிதாங்கூர்த் தமிழ்ப்புலவர்’ ஒருவர் கேரளத்தைச் சார்ந்தவர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.முதல் நூற்றாண்டுவரையில் கேரள நாட்டுப் புலவர்கள் பலர் தமிழில் பாடியுள்ளனர். அவை புறநானூறு அகநானூறு பாடல்களுள் உள்ளன.

புறநானூற்றில் கேரள நாட்டு (சேர நாட்டு) அரசர்களைப் பற்றிய பாடல்கள் பல இருக்கின்றன. பதிற்றுப்பத்து கேள்விபட்டிருப்பீர்களே? அதில் இருக்கும் நூறு பாடல்களும் அவர்களைப் புகழ்ந்து பாடப்பட்டவை தான். அது ஏன்? சிலப்பதிகாரம் இருக்கிறதே.. அக்காவியத்தை இயற்றிய ‘இளங்கோவடிகள்’ கேரளநாட்டுத் தமிழ்ப் புலவரே! கண்ணகிக்குக் கேரள நாட்டின் ‘திருவஞ்சைகள’த்தில் (திருவஞ்சிக்குளத்தில்) கோவில் கட்டப்பட்டிருக்கிறது. ஆழ்வார் நாயன்மார்களில் (கி.பி. ஏழு எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகள்) ‘சேரமான் பெருமாள் நாயனா’ரும் ‘குலசேகர ஆழ்வா’ரும் கேரள நாட்டைச் சார்ந்தவர்கள். தமிழ் இலக்கிய நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலையின் (கி.பி. பத்தாம் நூற்றாண்டு) ஆசிரியர் ‘ஐயனாரிதனார்’ கேரள நாட்டைச் சார்ந்தவர்.

இவ்வாறு பல நூற்றாண்டுகளாகக் கேரள நாடு ‘சேர நாடு’ என்ற பெயருடன் தமிழ்நாட்டின் ஒரு பிரிவாக இருந்து தமிழ் வளர்த்து வந்தது. அதனால்தான் மற்றத் திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமையைவிட, தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒற்றுமை மிகுதியாக உள்ளது..

அடுத்த பதிவில் தமிழுக்கு இருக்கும் பிற நாட்டுத் தொடர்பு பற்றி டாக்டர் மு.வ. சொல்லியிருப்பதைப் பார்க்கலாம் :-)

நன்றி : டாக்டர் மு.வரதராசன் (சாகித்திய அகாதெமி)
Read More...