தமிழும் மலையாளமும்
Dec 6, 2012
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் – இந்த நான்கு
திராவிட மொழிகளுக்குள் இன்றும் ஏறத்தாழ ஐந்தாயிரம் சொற்கள் பொதுவாக உள்ளன! இலக்கணக்
கூறுகள் பல பொதுவாக உள்ளன. சமஸ்கிருத மொழியின் கலப்பால் ஆயிரத்தைநூறு
ஆண்டுகளுக்கு முன்பே கன்னடமும் தெலுங்கும் தமிழ் மொழியிலிருந்து
மிகவும் வேறுபட்டுவிட்டன. ஆனால் மலையாளமும் தமிழும் அவ்வளவு மிகுதியாக வேறுபடவில்லை.
கேரளத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு
முன்புதான் அதிகமாயிற்று. அதற்குமுன் தமிழ் அங்கே ஆட்சி மொழியாகவும் கலைமொழியாகவும்
இருந்து வந்தது.
கேரள
நண்பர்கள் மலையாளம் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? கூர்ந்து கவனித்தால் தமிழையும் சமஸ்கிருதத்தையும்
கலந்து பேசுவது தான் மலையாளம் எனத் தோன்றும் :-)
பதினைந்து நூற்றாண்டுகளுக்குமுன் ஆண்டுவந்த சேர
மன்னர்கள் ‘தமிழ்’ அரசர்கள். அதற்குப் பிறகு பாண்டிய அரச மரபைச் சார்ந்த தமிழ் அரசர்களே
‘பெருமான்கள்’, ’பெருமக்கன்மார்’ என்ற பெயரோடு
அங்கே பத்தாம் நூற்றாண்டுவரையில்
ஆண்டுவந்தார்கள். தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்
அரங்கேற்றப்பட்டபோது தலைவராக இருந்த ‘திருவிதாங்கூர்த்
தமிழ்ப்புலவர்’ ஒருவர் கேரளத்தைச் சார்ந்தவர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல்
கி.பி.முதல் நூற்றாண்டுவரையில் கேரள நாட்டுப் புலவர்கள் பலர் தமிழில் பாடியுள்ளனர்.
அவை புறநானூறு அகநானூறு பாடல்களுள் உள்ளன.
புறநானூற்றில் கேரள நாட்டு (சேர நாட்டு) அரசர்களைப்
பற்றிய பாடல்கள் பல இருக்கின்றன. பதிற்றுப்பத்து கேள்விபட்டிருப்பீர்களே?
அதில் இருக்கும் நூறு பாடல்களும் அவர்களைப் புகழ்ந்து பாடப்பட்டவை தான். அது ஏன்? சிலப்பதிகாரம்
இருக்கிறதே.. அக்காவியத்தை இயற்றிய ‘இளங்கோவடிகள்’
கேரளநாட்டுத் தமிழ்ப் புலவரே! கண்ணகிக்குக் கேரள நாட்டின் ‘திருவஞ்சைகள’த்தில் (திருவஞ்சிக்குளத்தில்)
கோவில் கட்டப்பட்டிருக்கிறது. ஆழ்வார் நாயன்மார்களில் (கி.பி. ஏழு எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகள்) ‘சேரமான் பெருமாள் நாயனா’ரும் ‘குலசேகர ஆழ்வா’ரும் கேரள நாட்டைச் சார்ந்தவர்கள்.
தமிழ் இலக்கிய நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலையின்
(கி.பி. பத்தாம் நூற்றாண்டு)
ஆசிரியர் ‘ஐயனாரிதனார்’ கேரள நாட்டைச் சார்ந்தவர்.
இவ்வாறு பல நூற்றாண்டுகளாகக் கேரள நாடு ‘சேர நாடு’
என்ற பெயருடன் தமிழ்நாட்டின் ஒரு பிரிவாக இருந்து தமிழ் வளர்த்து வந்தது. அதனால்தான்
மற்றத் திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமையைவிட, தமிழுக்கும் மலையாளத்துக்கும்
ஒற்றுமை மிகுதியாக உள்ளது..
அடுத்த பதிவில் தமிழுக்கு இருக்கும் பிற நாட்டுத்
தொடர்பு பற்றி டாக்டர் மு.வ. சொல்லியிருப்பதைப் பார்க்கலாம் :-)
நன்றி
: டாக்டர் மு.வரதராசன் (சாகித்திய அகாதெமி)
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
தொடக்கம் அருமை. வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு, தெரிந்துக்கொண்டேன். எனக்கு தமிழும் மலையாளமும் படிக்க எழுதத் தெரியும். நான் அமீரகம் வந்தபிறகுதான் மலையாளம் படிக்க எழுதக் கற்றுக்கொண்டேன். நீங்கள் சொல்வதைப்போல் எழுத்துகள் மட்டுமில்லை, வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை....
அருமையான பதிவு , அடுத்தப் பதிவையும் தொடருங்கள் நானும் உங்களை பின் தொடர்கிறேன், எனது வலைப்பதிவில் தமிழ்சொற்களில் கலந்துள்ள வடமொழிச் சொற்களைப் பற்றி எழுதியுள்ளேன், நேரம் கிடைத்தால் படிக்கவும்.
இதோ உங்களை பின்தொடர்ந்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
சில வார்த்தைகள் தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவாக இருக்கும். ஆனால், பொருள் வேறு வேறாகவும் இருக்கும். உதாரணம் ; புத்திமட்டு (ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு)
நிறைய தகவல்கள்! வெரி குட்! :-)
@ வே.நடனசபாபதி (நல்ல பெயர் :))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ செம்மலை ஆகாஷ்
தமிழ் சொற்களில் வடமொழிச் சொற்கள் கலப்பு பற்றிய தங்களது பதிவைப் படிக்க ஆர்வமாக உள்ளேன். படித்துவிட்டுக் கருத்திடுகிறேன்.
வருகைக்கும் பின்தொடர்தலுக்கும் கருத்துக்கும் நன்றி!
@ சேட்டைக்காரன்
ஆம் :) நான் கூட அப்படியான வார்த்தைகளைக் கவனித்திருக்கிறேன். இப்போது நினைவிற்கு வரவில்லை. ஹிந்தியில் கூட அது போன்ற வார்த்தைகள் இருக்கின்றன. அர்த்தம் அதற்கு ஒத்த தமிழ் வார்த்தையோடு நெருங்கிய தொடர்பு உடையதாக இருக்கும்..ஆனால் எக்சாட் ஆகப் பொருந்தாது..
தங்களது உதாரணம் நன்று! :)
கேரளத்தில் நல்ல பழந்தமிழ் சொற்களை இன்னும் பயன்படுத்துகிறார்கள்.
தமிழும், மலையாளமும் ஒரு ஒப்பீடு. எனது அருமை மகள் சுபத்ரா அவர்களின் பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
நல்ல அலசல்... நன்றி....
arumai
புத்திமட்டு தமிழே இல்ல. சமற்கிருதம். மலையாளதததான் சொல்ற பொருள் தான் சரி. நாம் பல சமற்கிருத சொல்ல தப்பான பொருள்தரும் புழங்குறோம் அதுல இதுவமொன்னு
மலையாளம் தமிழ் மற்றும் சமற்கிருத கலப்பென்னு சொல்லும் பொழுது நாம் எந்த தமிழுன்னு சொல்லனும். பேரு ஒன்னா இருக்கலாம் ஆனால் மூனு தமிழிருக்கு. நாம் இப்ப பேசுறது இற்றைத் தமிழ் 1700கள்ல உண்டானது. இடைக்காலத்தமிழோட குழந்தை. மலையாளமும் அதேப்போல தான். 1600கள்ல இடைக்காலத்தமிழ்ல இருந்து பிரிந்து உண்டானது. நம்ம இற்றைத் தமிழ் போல மலையாளமும் சமற்கிருதம் துணையில்லாம இயங்க முடியும்.
மலையாளம் தமிழ் மற்றும் சமற்கிருத கலப்பென்னு சொல்லும் பொழுது நாம் எந்த தமிழுன்னு சொல்லனும். பேரு ஒன்னா இருக்கலாம் ஆனால் மூனு தமிழிருக்கு. நாம் இப்ப பேசுறது இற்றைத் தமிழ் 1700கள்ல உண்டானது. இடைக்காலத்தமிழோட குழந்தை. மலையாளமும் அதேப்போல தான். 1600கள்ல இடைக்காலத்தமிழ்ல இருந்து பிரிந்து உண்டானது. நம்ம இற்றைத் தமிழ் போல மலையாளமும் சமற்கிருதம் துணையில்லாம இயங்க முடியும்.
Post a Comment