உங்கள் எல்லாருக்கும் Reiki (or) Pranic Healing பற்றித் தெரிந்திருக்கும் . தெரியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம் :) நான் சொல்கிறேன் .. தெரிந்தவர்கள் , “Reiki- யும் Pranic Healing- ம் ஒன்றா ?” என்ற கேள்வியை என்னிடம் முன்வைக்கலாம் . அதற்கும் உண்டான பதிலை நானே சொல்கிறேன் . இது முழுக்க முழுக்க என்னுடைய புரிதலின் பேரில் பதிவு செய்வதே ! ரெய்கி என்றால் என்ன ? அது ஒரு வகையான சிகிச்சை முறை . இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன் . நமக்குக் கண்ணுக்குத் தெரிவது எலும்பு , சதை , ரத்தம் , நரம்புகளால் ஆன உடல் மட்டுமே . நம் ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் சூட்சும உடல் ஒன்று இருக்கிறது . அது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை . பொதுவாகப் பொருள் என்பது Solid, Liquid அல்லது Gas நிலையில் இருக்கும் . இந்தச் சூட்சும உடம்பானது Plasma என்னும் நேர் மற்றும் எதிர்மறை அயனிகளால் (Positive and Negative Ions) ஆன ஒரு ( நான்காம் ) நிலையில் உள்ளது . உடல் திசுக்களின் செல்களில...