முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இப்படிக்கு

மம்மி , அத்தான் நீ இப்பெலாம் கொஞ்சவே மாட்ற கோபமா பேசற அழ வைக்கற ஊட்டி விடறதில்ல சாக்லேட் தர்றதில்ல முத்தம் கொடுக்கறதில்ல - அம்மு வோட அம்மா பொம்மி

இலக்கிய விருதுகள்

வணக்கம் ! நலம் நலமறிய ஆவல் . ஊருக்கு வந்ததும் நான் எழுதும் முதல் பதிவு இது . East or west, home is best :-) படிக்கத் தொடங்கிவிட்டதால் வேறு எதற்கும் நேரம் ஒதுக்குவது சிரமமாக உள்ளது . இருந்தாலும் படிப்பே மிகவும் சுவாரசியமாகத் தான் செல்கிறது . எண்ணற்ற செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது .

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

3

விநாயகருக்குப் பூஜையெல்லாம் முடிச்சு கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டீங்களா ? இன்னைக்கு இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா ? 

முகமற்றவளின் முகமன்

கமலாவும் நானும்

வணக்கம் ! ரொம்ப நாள் கழிச்சு என்னோட பதிவு இட்லிவடைல வந்திருக்கு . உங்க எல்லாருக்கும் “ திரு . பி . எஸ் . ரங்கநாதன் aka கடுகு aka அகஸ்தியன் ” அவர்களை நல்லா தெரிஞ்சிருக்கும் . அவரோட “தாளிப்பு” வலைப்பூல வந்த கமலா சீரீஸ் கட்டுரைகளோட, அவரோட பல முக்கியமான சொந்த அனுபவங்களை எல்லாம் சேர்த்து வந்த புத்தகம் தான் “கமலாவும் நானும்”. நந்தினி பதிப்பகம். அவரோட வலைத்தளம் கூட ஒரு treasure house மாரி இருக்கும் . அவர்கள் எழுதுன “ கமலாவும் நானும் ” புத்தகத்தைப் பத்தி ரசிச்சு ஒரு பதிவு எழுதிருக்கேன் .

பறக்கவே என்னை அழைக்கிறாய்!

எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பிடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எங்க ஆச்சியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எங்க பாட்டிக்கு எங்க அம்மா ஒரே பொண்ணு. எங்க அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு :-) அதனால என் மேல பயங்கர பாசம் எங்க பாட்டிக்கு. நான் ஏதாவது சேட்டை பண்ணிட்டு அம்மாகிட்ட அடிவாங்கி அழுதபோதெல்லாம் எங்க பாட்டி என் அம்மா மேல கோபப்பட்டு ‘உண்ணாவிரதம்’ இருப்பாங்கன்னா பார்த்துக்கோங்க! அதனாலயே நான் எப்பவும் அவங்க கூடவே அலைவேன். அவங்க எனக்கு இன்ட்ரோ கொடுத்து வெச்சதுதான் “அக்கக்கோ குருவி”. பெரிய ஆலமரத்துல எங்கேயோ ஒரு கிளையில உக்கார்ந்து “அக்கோ... அக்கோ”னு கூவிக்கிட்டே இருக்கும். என் தம்பி வேற என்னை அக்கானு தான் கூப்பிடுவானா.. ஸோ அது என்னைத் தான் கூப்பிடுதோனு எனக்குப் பயங்கர ஆவல். தினமும் அதுக்காகக் காத்திருந்து காத்திருந்து, எங்க அம்மாகிட்டேயும் ஆச்சிகிட்டேயும் கூட கேட்க ஆரம்பிச்சேன் அக்கக்கோ குருவி எங்கேனு. சமீபத்துல ஒருநாள் அதே குரலை இங்கே வீட்டருகில் கேட்டதும் ஒரு கணம் டைம் மெஷினில் ஏறி இறங்கிவிட்டேன். விடுமுறை விட்டதும் ஒவ்வொரு வருடக் கோவில் கொடைக்கும் அப்பாவின் ...