முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆச்சி மசாலாவின் நீயா நானா

இன்று விஜய் தொலைக்காட்சியில் “ நீயா நானா ” நிகழ்ச்சியைப் பார்த்தேன் . பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றிய சூடான விவாதம் ஓடிக்கொண்டிருந்தது . எந்த எந்தச் சூழ்நிலைகளில் பெண்கள் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற கேள்வியைத் தொடர்ந்து , இது போன்ற வன்முறைகளுக்குக் காரணம் முழுக்க ஆண்கள் தானா ? இல்லை பெண்களும் காரணமா ?

உயிர்த்தேடல்

மரவுடலின் கிளைநரம்புகளில் முளைத்திருக்கும் இலைமுடிச்சுகளினூடே பிரவகிக்கும் வெப்பநாளங்களில் ரத்தவோட்டத்தைப் பீய்ச்சியடிக்கும் இதயப்பழத்தின் எவ்வணுவில் உயிர்த்திருக்கும் எனக்கான உனதுயிர் ?

Exam Jokes

ஒரு சின்ன conversation.. யார் யாருக்குனு கேட்கக் கூடாது ;-) “ அக்கா ..” “ என்ன சொல்லு ” “ நேத்து டெஸ்ட்க்கு நான் படிக்காம பொயிட்டேன் ” “ நாய் மனுஷன கடிச்சா நியூஸ் இல்ல . மனுஷன் நாயைக் கடிச்சா தான் நியூஸ் ”

IAS தேர்வில் தமிழ் மாணவர்கள்

இந்த வருடத்திற்கான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை UPSC நேற்று வெளியிட்டது . ஏறத்தாழ 1000 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வுக்குப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . வேறு சிறப்புத் தகுதிகள் எவையும் தேவையில்லை . தேர்வில் தோன்றுவதற்கான வயது வரம்பு , தேர்விற்கான பாடத்திட்டம் , தேர்வு மையங்கள் போன்ற தகவல்களை அறிவிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் .

அதுவும் அவளும்

ஆரஞ்சு பழத்தை விழுங்கிபடியே குமுறியது கடல். அருகாமையில் நிரதியில் மிதந்தோர் தட்டிகளால் நெம்பி த் தள்ளிக்கொண்டிருந்தனர் அதன் வயிற்றில் . செரிக்காமல் கரையில் நுரைகக்கிய அதன்மேல் விழுந்து அணைத்தவளைத் தள்ளிக்கொண்டேயிருந்தது . சிரித்த அவளின் உள்ளாடைக்குள் மணல்நிரப்பி பொய்வன்மம் தீர்த்தபின் தொலைவாகிப் போனது குழந்தைக்குக் கடல் . இப்பொழுதெல்லாம் அவள் கடற்கரையில் நடக்கையில் கால் மட்டுமே நனைக்கிறாள் அலைகளைக் கட்டியணைப்பதில்லை .

டைட்டில் வேற வைக்கனுமா?

அ வள் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் . படிப்பில் அவள் எப்பவுமே செகண்ட் . இன்னொரு பையன் எப்பவுமே ஃபர்ஸ்ட் . இருவரும் அருகருகே தான் உட்கார்ந்திருப்பார்கள் . அடிக்கடி சேர்ந்து படிப்பார்கள் . ஒரு நாள் கணக்கு நோட்டை ஆசிரியரிடம் காண்பித்து ‘ டிக் ’ வாங்கிவிட்டு இருக்கைக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி . தன்னுடைய புத்தம்புது ஜாமெட்ரி பாக்ஸில் யாரோ கிறுக்கியிருந்தார்கள் . அவளுக்குப் புரிந்துவிட்டது ..

புதிர்

ஒரு சின்ன Thinkerobics உங்களுக்காக .. Try solving it.