There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

சிதம்பர ரகசியம்

May 22, 2015



அபியிடம் இருந்து கால் வந்தது.

ஃப்ரீயா இருக்கியா?”

ஃப்ரீ தான் சொல்லு

நேத்து உனக்கு டேடா கார்ட் ரீசார்ஜ் பண்ணிட்டு வாறேன்.. நம்ம கோர்ட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு ரோடு இருக்குல்லா?”

ஆமா

அதுல நடுரோட்டுல ஒராளு ஃபிட்ஸ் வந்து இழுத்துட்டு கெடக்காரு

ஐயோ.. அப்புறம்?”

அப்படியே மண்ணுல பிரண்டுட்டுக் கெடக்காரு

அப்றம் என்னாச்சு?”

அப்றம் அவர தூக்கி கையில ரெண்டு கம்பியைக் கொடுத்து உக்கார வெச்சோம். ஃபிட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா நின்னுச்சு

நீ ஹெல்ப் பண்ணியா இல்லையா?”

ஆமா.. கேளு

சொல்லு

எண்ணே.. வீடு எங்கருக்குனு கேக்கேன், சிதம்பரம்னு சொல்லுதாரு!

ஐயையோ.. திருநெல்வேலிக்கு எதுக்கு வந்தாராம்?”

செண்ட்ரிங் வேலைனு சொல்லி நெறைய பேரைக் கூட்டிட்டு வந்திருக்காங்க, இவருக்கு ஃபிட்ஸ் இருந்ததால வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். ‘ரெண்டு நாளா ஹைகிரவுண்டுல இருந்து சமாளிச்சேன். அங்கயும் போகச் சொல்லிட்டாங்கனு சொல்லுதாரு


கையில ஒரு பை வெச்சிருக்காருடே. உள்ள ஒரு சட்டை, ஒரு பேண்ட். வேற ஒன்னுமில்ல. ஊருக்குப் போறதுக்குக் கூட கையில காசு இல்ல

காசு குடுத்தீங்களா?”

குடுத்தோம்.. கேளு. உடம்பு ஃபுல்லா மண்ணு. கையிலயும் மண்ணு. அத அந்தப் பழைய சட்டைய வெச்சி தொடைக்காரு. ஒரு துண்டு கூட இல்ல

“...”

ஊருக்குப் போக எவ்வளவு ஆகும்னு கேட்டோம். 250 ரூபா இருந்தா போதும்னு சொன்னாரு. ஒரு 400 ரூபா கொடுத்தோம். அப்றம் நான் தான் பஸ் ஏத்திவிட்டேன். புது பஸ் ஸ்டாண்ட் போகலாம்னு சொன்னேன். ‘இல்ல தம்பி, சமாதானபுரத்துல எறக்கி விட்டுரு. போயிருவேன்னு சொல்லிட்டாரு

ம்ம்

பஸ் ஏறுறதுக்கு முன்னாடி ஒரு 300 ரூபா குடுத்தேன். பட்டுனு என் கால்ல உழுந்துட்டாரு?”

“...”

காசு வேணும்னு கேக்க மாட்டேங்குறாருடே. ‘கையில காசில்லாம எப்படிப் போவீங்கனு கேக்கேன்.. ‘மொத்தமா அவங்களே காசு போட்டு எல்லாரையும் கூட்டிட்டு வந்தாங்க. போறதுக்குக் காசு தரல. எப்படிப் போறதுன்னு தெரியலனு சொல்லி ஒரு மாதிரி சங்கடப்படுதாரு. அப்றம் தான் காசு கொடுத்தோம்

ம்ம்

சரி.. உங்க வீட்டுல யாரு இருக்கா? போன் நம்பர் இருக்கா? ஒரு செல்லாவது வெச்சிருக்கக் கூடாதா? 500 ரூபா ஆகுமா?”னு கேட்டேன்

ம்ம்

“‘கஞ்சிக்குக் கூட வழியில்ல. இதுல எங்க செல் வாங்க? பொண்டாட்டியும் ஒரு பிள்ளையும் இருக்கு. பையன் வேலைக்குப் போறான், அவனையும் நாம தொல்ல பண்ணக் கூடாதுனு தான் வேலைக்கு வந்தேன்’னு சொல்லுதாரு

அவருக்கு எத்தன வயசிருக்கும்?”

நம்ம அப்பா வயசு


அந்தக் கம்பியைக் கையிலயே வெச்சிக்கோங்கனு சொல்லிக் குடுத்தோம். நான் தான் பைக்ல ஏறச்சொல்லி சமாதானபுரத்துல பஸ் ஏத்திவிட்டேன்

ம். அம்மாட்ட சொன்னியா இந்த விசயத்த?”

சொன்னேன். கோர்ட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு ஆளு ஃபிட்ஸ் வந்து கெடந்தாருனு சொன்னேன்

என்ன சொல்லுச்சு?”

“‘ஆமா. எவனாது குடிச்சிட்டு ரோட்டுல உழுந்து கெடப்பான்.. கிட்ட போயிறாதனு சொல்லுச்சு. அதோட நிறுத்திக்கிட்டேன்

ம்ம்

சரி வச்சிருதேன். அப்புறம் பேசுறேன்

5 comments:

ezhil said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனிதர்களின் பல கோணத்தை அலசிய அனுபவம்தான்...

வருண் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அந்தாளு ஒரு வேளை ஏமாத்துறாரோனு நெனச்சு உதவி செய்யாமல் போய்விட்டால்.. ஒரு வேளை அவர் உண்மையிலேயே ஃபிட்ஸ் வந்து கஷ்டப்பட்டுயிருப்பாரோ? னு மனசாட்சி கொல்லும்.

உதவி செய்யப்போயி ஏமாந்தும் இருக்கலாம்தான். என்னைக்கேட்டால் இதுபோல் ஏமாறுவது ஒன்னும் பெரிய தப்பில்லை.

எப்படிப் பார்த்தாலும் உதவி செஞ்சது தப்பில்லை if it is not such a big sum of money and one can afford that sum without hurting him/herself.

One can complicate this also..Sometimes I feel that helping someone is also somewhat selfish attitude of mine only. I think I help because it makes me feel good about myself. :-) BTW, I am only talking about myself. Take it easy.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ezhil

ம்ம்..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@வருண்

Don't worry Varun, I largely agree with u nowadays ;)

கானகம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் இதேபோல மகளுக்கு கல்யாணம்னு உதவி கேட்கும் ஒருவருக்கும், உதவி கேட்கப்படுபவருக்குமாக நடக்கும் உரையாடல்களும் மனதுக்குள் எழும் சந்தேகங்களையும் வைத்து அழகாக ஒரு கதை சொல்லி இருப்பார்.

நாம் குறைந்து போய்விடாத அளவுக்கு உதவியெனில் கேட்பவன் பொய்யனாக இருந்தாலும் செய்யலாம் என்பதே என் கட்சி.