There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

கலங்கப்போவது யாரு?

Sep 20, 2010

”கலங்கப்போவது யாரு”
வணக்கம்.. வந்தனம்.. வெல்கம் டு "கலங்கப்போவது யாரு!" நான் உங்க அபிமானத்துக்குரிய தேஜா.
அண்ட் இந்த நிகழ்ச்சிய பற்றிச் சொல்லணும்னா...ம்ம் பேரக் கேட்டவுடனே தெரிஞ்சிருக்கும் இது ஒரு ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சினு!

சரி, நம்ம நிகழ்ச்சியில இது வரைக்கும் 999 எபிசோடுகளை வெற்றிகரமாகக் கடந்து இன்னைக்கு 1000 -வது எபிசோடுக்கு அடி வைத்திருக்கிறோம்....சாரி அடியெடுத்து வைத்திருக்கிறோம்.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட பல ஜோடிகள் மிக அறுவையாக.....மன்னிக்கவும் மிக அருமையாக விளையாடித் தோற்றுப்போனாலும் துரதிர்ஷ்ட வசமாக இந்தக் கடைசிச் சுற்றுவரை  இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர்.

ஏன் துரதிர்ஷ்டம்னு சொல்றேன்னா இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்க்கு பரிசுகளாய் ஒரு டேபிள்டாப் கிரைண்டர்,  ஒரு வேக்கும் கிளீனர், ஒரு வாஷிங் மெஷின், மேலும் குட்டிக் குட்டிப் பரிசுகள் பல காத்திருப்பதால் இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்குச் சற்றே ஆபத்து அல்லது அபாயகரமான சூழல் காத்திருக்கின்றது என்றே கருதப்படுகிறது. இதுவரை வேலைக்கு ஆள் வைத்து செய்துகொண்டிருந்த வீடுகளில் தற்பொழுது வழக்கம்போல கணவர்களே வேலைசெய்யும் ஒரு பரிதாப நிலைமைக்குத் தள்ளப்படுவதால் ஆண்களிடையே ஒரு சிறு பேதியை....மன்னிக்கவும் பீதியை இது கிளப்பியுள்ளது.

சரி.. மேலும் மேலும் இது பற்றிப் பேசி அவர்களைக் கலங்கச் செய்வதை விட நேரடியாக நிகழ்ச்சிக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.

முதல் ஜோடி.. ஆட்டுக்கார அலமு ஆண்ட் அவரது கணவர் வேட்டிக்கார.. மறுபடியும் மன்னிக்கவும் வேட்டைக்கார வேலு!
அடுத்த ஜோடி.. ஒய்யாரி மற்றும் அவரது கணவர் ஒய்.ஒய்.தாஸ்!

இரண்டு ஜோடிகளையும் மேடைக்கு அழைக்கிறோம். (டடட டண்ட டான்)

வாங்க அலமு அண்ட் வேலு.. நேயர்களுக்கு டாடா காட்டுனது போதும். நேரமாயிருச்சு. வாங்க விளையாடலாம்.
அட உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா? வாங்க உக்காருங்க.

தேஜா: ரொம்ப கவனமாக் கேளுங்க. இந்தச் சுற்றில் ஆண்கள் இருவரும் அந்த சவுண்ட் ப்ரூப் அறைக்குள் தள்ளப்படுவார்கள். பெண்களிடம் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். பிறகு இதே போல் பெண்களை உள்ளே தள்ளிவிட்டு ஆண்களிடம் அதே ஐந்து கேள்விகள் கேட்கப்படும். கணவன் மனைவி இருவரும் ஒரே பதிலைக் கூறும் பட்சத்தில் அது சரியான விடையாகக் கருதப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். நான் ரெடி. நீங்க ரெடியா?

அலமு: இதே கேள்விய தான் தினமும் கேக்குறீங்க. புதுசா ஏதாவது கேளுங்களேன்.

ஒய்யாரி: மேக்கப் வேற களைஞ்ச மாதிரி ஒரு பீல் இருக்கு. ஒரு டச்சப் பண்ணிட்டு வர பெர்மிஷன் கிடைக்குமா?

தேஜா: நத்திங் டூயிங். ரெண்டு பேரும் உள்ளே போயிட்டாங்க. முதலில் அலமு வாங்க. ஒய்யாரி யூ பிளீஸ் பீ சீடெட்.

உங்களுக்கான முதல் கேள்வி:

தேஜா: 1 . உங்களுக்கு ஆட்டுக்கார அலமு என்று பெயர் வந்ததன் காரணம் என்ன?

அலமு: எனக்கு இயற்கையிலேயே ஆட்டுக்குட்டினா உயிரு. தூக்கி வச்சு கொஞ்சிகிட்டே இருப்பேன். அதப்பாத்து தோழிகள் எல்லாரும் என்ன ஆட்டுக்காரி ஆட்டுக்காரினு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அலமு என்னுடைய இயற்பெயர். இரண்டும் சேர்ந்து "ஆட்டுக்கார அலமு" என்ற செல்லப் பெயர் வந்திருச்சு. 

தேஜா: 2 . உங்கள் கணவருக்கு வேட்டிக்கார வேலு என்ற பெயர் வந்ததன் காரணம்? மன்னிக்கவும் இந்தப் பெயர் வாயில் நுழைவதில் சற்றுச் சிரமமாக இருப்பதால் அப்படி கேட்டு விட்டேன். "வேட்டைக்கார வேலு" எப்படி வந்தது. சொல்லுங்க..

அலமு: பரவாயில்ல. நாங்க முதல்ல "வெட்டிகார வேலு"னு தான் செல்லமாக் கூப்டுட்டு இருந்தோம். அப்புறம் வேட்டைக்காரன் படத்த அவர் தைரியமாப் பார்த்துட்டு வந்ததுல இருந்து "வேட்டைக்கார வேலு"னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். தட்ஸ் ஆல். நெக்ஸ்ட் கொஸ்டீன் பிளீஸ்.

தேஜா: 3 . உங்கள் கணவரிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன?

அலமு: எவ்வளோ அடிச்சாலும் தாங்கிக்குவாருங்க. அவர் ரொம்ப நல்லவரு.

தேஜா: 4 . திருமணமாகி உங்கள் கணவர் உங்களுக்கு முதன் முதலில் கொடுத்த பரிசுப் பொருள் என்ன?

அலமு: அவரையே பணம் கொடுத்துப் பரிசாத் தான் வாங்கிட்டு வந்திருக்கேன். இருந்தாலும் அவரோட ஆசைக்காக முதன் முதலா எனக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தந்தாருங்க. அந்த அன்ப நெனச்சா எனக்கு இப்பக் கூட அழுக பொத்துக் கிட்டு வருதுங்க.

தேஜா: கண்ட்ரோல் யுவர்செல்ப். கண்ணத் தொடச்சுக்கோங்க. நேயர்கள் எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க. அவங்களையும் பீல் பண்ணி அழவச்சு இத ஒரு மெகாசீரியல் மாதிரி ஆக்கிறாதீங்க. கடைசிக் கேள்வி இது கொஞ்சம் ஜீகே. யோசிச்சு சொல்லுங்க.

கேள்வி என் 5 : எந்திரன் படத்தில் எந்தக் கதாப்பாத்திரம் உங்களை மிகவும் கவர்ந்தது?

அலமு: என்னக் கொடுமைங்க இது..? படமே இன்னும் வரலையே!! எப்படி தெரியும் எனக்கு?

தேஜா: படம் மட்டும் தான் வரல. மத்தபடி கதை கதாப்பத்திரம் எல்லாம் வெளி வந்திருச்சு. சின்னக் கொழந்தையக் கேட்டாக் கூட சொல்லிரும். நான் மொதல்லையே சொன்னேன். இது கொஞ்சம் ஜீகேனு. 

அலமு: ரஜினினு வெச்சுக்கோங்க.

தேஜா: ஓகே.. நீங்க இப்ப உள்ளே போலாம். வேல்ஸ் இப்போ வெளியே வருவாரு. 

(டடட டண்ட டன்)

தேஜா: வாங்க வேலு. உக்காருங்க. உங்க மனைவியிடம் கேட்கப்பட்ட அதே ஐந்து கேள்விகள் உங்களுக்கும் கேட்கப்படும். மேனிப்புலேஷன் ஏதும் பண்ணாம உங்க நெஞ்சத் தொட்டு சரியான விடையை சொல்லுங்க. சரி, கேள்விக்குப் போலாமா?

வேலு: இருங்க.. இது வரைக்கும் அந்த ரூமுக்குள்ள இருந்தப்போ காதுக்குள்ள "வொயிங்..."னு ஒரு சத்தம் மட்டும் தான் கேட்டது. இப்போ உங்க குரலை கேட்டுச் சும்மா அதிருதுல்ல. நான் கொஞ்சம் செட் ஆயிக்கிறேன். இருங்க.

தேஜா: ஒய்யாரி இதுக்குள்ளயே ஒரு 56 தடவ டச்சப் முடிச்சிட்டு "என்ன கூப்பிடுங்க கூப்பிடுங்க"ன்னு சைடுல இருந்து சைகை காமிச்சுகிட்டே இருக்காங்க. அவர்களின் நலம் கருதி நீங்க கேட்ட அந்தக் கால அவகாசத்த என்னாலக் கொடுக்க முடியல. கேள்விக்குப் போலாம். வாங்க.

முதல் கேள்வி: 1 . உங்க மனைவிக்கு ஆட்டுக்கார அலமு என்று பெயர் வந்ததன் காரணம் என்ன?

வேலு: கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். அப்ப கோழி மீனு முட்ட நண்டுன்னு வெரைட்டியா சமைச்சு வச்சிருந்தாங்க. ஆனா என் மனைவி எனக்கு "ஆட்டுக்கறி" தான் வேணும்னு அடம் பிடிச்சா. ஆனாப் பாவம் பாருங்க. அன்னைக்குப் பார்த்து எல்லாக் கடையும் பூட்டிட்டாங்க. கடைசிவர ஆட்டுக்கறி கெடைக்கவேயில்ல. அந்த ஏக்கத்துல ஏங்கி ஏங்கி பயங்கர ஜுரம் வந்து......கேக்காதீங்க. இப்ப நெனைச்சாக் கூட ஏக்கமா இருக்கு(அந்த மாதிரி இன்னொரு தடவ நடக்காதான்னு) 
கடைசியில ஒரு வாரம் கழிச்சு ஒடம்பு எல்லாம் சரியாகி மறுபடியும் அந்த வீட்டுக்கு விருந்துக்குப் போன போது தான் அவளுக்கு "ஆட்டுக்கார அலமு"னு ஒரு பட்டம் கொடுத்தாங்க. 

தேஜா: வெளங்கிரும்.. இந்தக் கேள்விக்கு உங்களுக்கு ஜீரோ மதிப்பெண்கள் வழங்கப் படுகின்றன. சரி அடுத்தக் கேள்வி.

கேள்வி 2 :  உங்கள் கணவருக்கு வேட்டைக்கார வேலு என்ற பெயர் வந்ததன் காரணம்?

வேலு: என்னது???

தேஜா: சாரி. டையலாக் சீட்-ல அந்த மாதிரி தான் எழுதிருந்தது. உங்களுக்கு எப்படி இந்தப் பெயர் வந்ததுனு சொல்லுங்க?

வேலு: அது என்னென்னா போர் அடிச்சா நான் டார்ச் லைட்ட எடுத்துகிட்டு முயல் வேட்டைக்குப் போறேன்னு சொல்லிட்டு காட்டுக்குத் தப்பிச்சுப் போயிருவேங்க..
"என்ன இருந்தாலும் வீட்டுக்காரிக்கு சேவை செய்யாம வேட்டைக்கு எல்லாம் போறான்டா.. இவன் பெரிய வீரன்டா"னு எல்லாரும் நெனச்சாங்க. அதனால அந்தப் பேரு வந்திருச்சுங்க. 

தேஜா:இதுவும் போச்சா?

வேலு: ச்சே.. கேள்வி எல்லாம் கொஞ்சம் சிக்கலாத் தான் இருக்கு. ஹெல்ப் லைன் எதுவும் கிடையாதா?

தேஜா: அதெல்லாம் ஒரு லைனும் கிடையாது. அடுத்தக் கேள்வி.

கேள்வி என்  3 : உங்களிடம் உங்கள் மனைவிக்குப் பிடித்த குணம் என்ன?

வேலு: எப்பவாது அவ வெந்நீர் வச்சு குடிக்கக் கொடுக்குறப்போ அது எவ்வளோ மோசமான டேஸ்ட்டா இருந்தாலும் "பேஷ் பேஷ்.. வெந்நீர் ரொம்ப நல்லா இருக்கு"னு வெள்ளந்தியா நான் சொல்ற அந்த நல்ல குணம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்மா.

தேஜா: ரொம்ப பீல் பண்ணவேண்டாம். இன்னும் ரெண்டு கேள்வி இருக்கு. அதுக்காவது உங்க ஹார்ட்-அ யூஸ் பண்ணாம மைன்ட் இருந்தா அத யூஸ் பண்ணி பதில் சொல்லுங்க.

கேள்வி 4 :   திருமணமாகி உங்கள் மனைவிக்கு முதன் முதலில் நீங்கள் கொடுத்த பரிசுப் பொருள் என்ன?

வேலு: எனக்கு எல்லாம் வாங்கித் தாங்க பழக்கம்.. ஹி ஹி ஹி

தேஜா: தப்பு. கடைசி கேள்வி இது.

கேள்வி 5 :  எந்திரன் படத்தில் எந்தக் கதாப் பாத்திரம் உங்கள் மனைவிக்கு மிகப் பிடித்தமானது?

வேலு: பாத்திரமா? அவளுக்கு ரொம்பப் பிடிச்சது சோத்துக் கரண்டி தாங்க. அதத்தான் புடிச்சு அடிக்கிறதுக்கு வசதியா இருக்குங்கன்னு அடிக்கடி என்கிட்டே மனசு விட்டு சொல்லுவா. சரியா?

தேஜா: 999 எபிசோடுக்கும் உங்கள தேத்தி தேத்தி நான் கடைசி ரவுண்டு வர கொண்டு வந்தேன். கடைசியில இப்படி கவுத்திட்டீங்களே.. என்னங்க இது?

ஒய்யாரி: தேஜா.. இப் யூ டோன்ட் மைன்ட்....நாங்க விளையாட வரலாமா?

தேஜா: இனிமேல் என்ன விளையாட்டு வேண்டி கெடக்கு? நேயர்களே... அலமு அண்ட் வேலு தம்பதியர் ஜீரோ மதிப்பெண்கள் வாங்கியதால் ஒய்யாரி அண்ட் ஒய்.ஒய்.தாஸ் தம்பதியினர் போட்டியின்றி வெற்றியாளர்களாய் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

ஒய்யாரி அண்ட் ஒய்.ஒய்.தாஸ் தம்பதியரின் ரசிகர்கள் எழுப்பிய வெற்றிக் கரகோஷம் ஸ்டுடியோ கூரையைப் பிளந்தது.

தேஜா: உள்ளே இருக்கும் உங்கள் கணவரை  இழுத்துக் கொண்டு மேடைக்கு வரவும்.

சிறிது நேரம் கழித்து..

ஒய்யாரி: மேடம்.. என் கணவரை ஆளைக் காணோம். எங்க போனார்னு தெரியல?!!

மேடையெங்கும் ஒரே கலவரமானது.

தேஜா: ஹலோ. வீட்டுக்கார வேலு. உங்க போன் அடிக்குது. எடுங்க.

வேலு: ஹலோ.. யாரு?

!???!!??!!: டேய்.. கடைசில என்ன மாட்டி விட்டுட்டியேடா!! அந்தப் பரிசு எல்லாம் எங்க வீட்டுக்குத்தான் வருதா? மவனே எங்க ஏரியாவத் தாண்டி தான உங்க ஏரியா? அப்போ வச்சுக்கிறேண்டி உன்ன.

வேலு: நண்பேன்டா !!   ஹா ஹா ஹா.. 

(டங்ங்ங்ங்ங்க்)

வேலு: ஆஆஆ......ஆஆஆஆஆ (தலையைத் தடவிக் கொண்டே)

அலமு: என்ன சிரிப்பு?? மொவரயப் பாரு... வீட்டுக்கு வாங்க. வச்சுக்கிறேன்.
*
*

11 comments:

தனி காட்டு ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//கலங்கப்போவது யாரு?//

வேற யாரு?இந்த பதிவ படிகரவங்க தான் ....

AnyWay...முதல் முயற்சி....வாழ்த்துக்கள்...
இவ்வளவு நீளமா பதிவ எழுதரீங்களே...படிக்கற எங்களுக்கே கலக்கமா இருக்கே.....பாவம் நீங்க எவ்வளவு கலங்கி இருபீங்களோ ..?
தொடர்ந்து கலங்குக ...மன்னிக்கவும் ..கலக்குங்க...

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ தனி காட்டு ராஜா

ஹி ஹி ஹி... இனிமேல் சுருக்கமா எழுதுறேன்.

இருந்தாலும் பொறுமையா படிச்சிட்டு கமெண்ட் வேற போட்டிருக்கீங்க.

உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது ;-)

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நகைச்சுவையில் ஆரம்பித்து உள்ளீர்கள்- வரவேற்புகள் -மற்ற சுவைகளுடன் கூடிய தங்களை பதிவை எதிர்நோக்குகின்றேன்...

பா.சுடர்மதி பிரான்சிஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நகைச்சுவையில் ஆரம்பித்து உள்ளீர்கள்- வரவேற்புகள் -மற்ற சுவைகளுடன் கூடிய தங்களை பதிவை எதிர்நோக்குகின்றேன்...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லா இருக்கு.ரொம்ப பெரிசா இருந்ததுனால ரொம்ப
கலங்கிட்டேன்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Francis

தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி. விரைவில் எதிர்பார்க்கலாம்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ கே.ரவிஷங்கர்

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?? எப்படியோ என் குறிக்கோள் நிறைவேறிவிட்டது.. :-)

தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஆதி மனிதன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//நாங்க முதல்ல "வெட்டிகார வேலு"னு தான் செல்லமாக் கூப்டுட்டு இருந்தோம். அப்புறம் வேட்டைக்காரன் படத்த அவர் தைரியமாப் பார்த்துட்டு வந்ததுல இருந்து "வேட்டைக்கார வேலு"னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம்//

படித்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. கடைசியா வேட்டைக்காரன நீங்களும் விட்டு வைக்கலையா? நக்கல் நையாண்டி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ ஆதி மனிதன்

நன்றி ஆதீஸ் ;-)

நாமக்கல் சிபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//கலங்கப்போவது யாரு?//

வேற யாரு?இந்த பதிவ படிகரவங்க தான் ....
//

:))

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ என்.ஆர்.சிபி

அஅஅ....ன்.. அழுதுடுவேன் ;’(