முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சொல்வனம் – கவிதைகள்

சொல்வனம் 191ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதைகள் :-) உறவு   வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய நாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன் .

சொல்வனம் – கவிதைகள்

சொல்வனம் 188 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதை கள் :-) பார்வைகள் தவிர்த்து அனைவரும் என்னையே பார்ப்பதாய்த் தோன்றிய எண்ணம் தவிர்த்து பேருந்து இருக்கையில் அமர்கிறேன் அலைபேசியின் செவிப்பொறியை அவிழ்க்கத் தொடங்கி உள்ளே வெளியே உள்ளே வெளியே என சிறிய சிக்கலைப் பிரிக்கப் பிரிக்க பெரிதாய்ப் பின்னிக்கொண்ட சரடு ஒரு சிறு பந்தைப் போல் ஆகிறது அப்படியே கேட்கலாம் எனக் காதில் செருகும்போது கவனிக்கிறேன் பேருந்தில் இருக்கும் வேறெவரின் செவிப்பொறியும் சிக்கலாயில்லை அது தரும் இசையில் லயித்திருக்கும் அவனும் அவளும் அதோ அவரும் ஒரே அலைவரிசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா அவரவருக்குப் பிடித்த இசை என்னவாக இருக்கும் மீண்டும் பின்னியிருக்கும் சரடைப் பிரிக்க முயன்றிருக்கும் போதே நிறுத்தம் வர இறங்குகிறேன். நாளை பார்த்துக்கொள்ளலாம் பேருந்தில் இடம்பிடிப்பதையும் சரடை நேராக்குவதையும் பேருந்துப் பயணத்தில் பாட்டு கேட்பதையும். *** பி.எம்.எஸ். நாட்கள் __ உலகம் சரியில்லை. நாடு சரியில்லை. வீடு குப்பையாக இருக்கிறது. பொருட்கள் இரைந்து கிடக்கின்றன. துணி துவைக்கத் தெம்பு ...

சொல்வனம் – கவிதை

சொல்வனம் 188 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதை 😊 ஆச்சி நான் பால் ஊற்றிக் கொண்டிருந்தபோது ஆச்சி இறந்தாள் என் முக வாஞ்சைகளும் அவளுக்கென்றே வைத்திருந்த பேரன்பும் உட்செல்லாமல் வெளியே வழிந்தன .

தனிமைக் காதலர்கள்

தனிமையே.. உன் காதலர்கள் கபடதாரிகள். உன் மடியமர்ந்து அவர்கள் பருகும் தேநீர் எச்சில் கலந்தது. உன் தோள்சாய்ந்து அவர்கள் வாசித்துக் கொண்டிருப்பது வேறொருவனின் அந்தரங்கத்தை. அவர்கள் முகர்வதெல்லாம் முற்றியுதிர்ந்த காலவெளி கடந்த முடிவிலி பிரியத்தின் மலர்களை. அவர்கள் சிந்தனையெங்கும் முன்னாள் காதலர்களிடம் அவர்கள் கேட்கத் தயங்கிய சில அபத்த ஐயங்களின் பட்டியல்கள் . உன் நிலவொளியில் அவர்கள் தூண்டிலிடுவதோ பல்லாயிரம் விண்மீன்களை.

சொல்வனம் – கவிதை

சொல்வனம் – கவிதை நலம், நலமறிய ஆவல்.  சொல்வனம்174 ஆம் இதழில் வெளிவந்த என் கவிதை 😊        

சிதம்பர ரகசியம்

அபியிடம் இருந்து கால் வந்தது . “ ஃப்ரீயா இருக்கியா ?” “ ஃப்ரீ தான் சொல்லு ” “ நேத்து உனக்கு டேடா கார்ட் ரீசார்ஜ் பண்ணிட்டு வாறேன் .. நம்ம கோர்ட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு ரோடு இருக்குல்லா ?” “ ஆமா ” “ அதுல நடுரோட்டுல ஒராளு ஃபிட்ஸ் வந்து இழுத்துட்டு கெடக்காரு ” “ ஐயோ .. அப்புறம் ?” “ அப்படியே மண்ணுல பிரண்டுட்டுக் கெடக்காரு ” “ அப்றம் என்னாச்சு ?”

தேன்நிலா அம்சம் நீயோ!

2013 ம் வருடம் இதே நாளில் என் நெருங்கிய தோழியைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன் . அப்போது ஜோஸ் குட்டி இன்னும் பிறந்திருக்கவில்லை . இப்போது சித்ராவுக்கு ஒரு ஜியா குட்டியும் பிறந்தாகிவிட்டது . பெண் குழந்தை ஒன்று இருந்தால் விதவிதமாக உடைகள் உடுத்தி அலங்காரம் செய்து ரசிக்கலாமே என்னும் ஆசை அவளுக்கு நிறைவேறியதில் எனக்கும் ஏக மகிழ்ச்சி . நானும் சித்ராவும் பத்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம் . நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன :) “ சீக்கிரமா நீயும் இந்த ஜெயிலுக்குள்ள வாடீ . படிச்சதெல்லாம் போதும் . நீ மட்டும் எப்படி எஞ்சாய் பண்ணலாம் ? இரு இரு .. உங்க அம்மாகிட்ட பேசி ஒடனே உனக்கொரு மாப்பிள்ள பார்க்கச் சொல்லுதேன் ” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள் . ஆனால் இதுவரை அப்படி எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை :) ஜோஸ் பிறந்திருந்த போது Lilliput- ல் அவனுக்கு இரண்டு ஆடைகள் எடுத்து வைத்திருந்தேன் . நான் கொடுப்பதற்குள் அவன் வளர்ந்...