There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

நாமிருவர்

Jan 18, 2011

என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப் போக்குவதற்கு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி தேவையாக இருந்தது. அட! மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன்! ஆறிப்போய்விட்டதோ என்று தொட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஏமாற்றத்துடன் திரும்பிவந்தாள்.

இன்னைக்கு லேட் ஆன மாதிரி தெரியல? எப்பவும் 4.20 மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்திருவானே..!” மஞ்சள் பூசி முகம் கழுவித் தலைவாரிப் பூவைத்துப் பாண்ட்ஸ் பவுடரின் மெல்லிய வாசத்துடனும் நெற்றியில் வட்டமான சாந்து பொட்டுடனும் அழகாகத் தெரிந்தாள் என் மனைவி. ஏழு வருடங்களுக்கு முன் அவளைப் பெண்பார்க்கச் சென்றபோது பார்த்து ரசித்த அதே முகம் சிறிதும் மாற்றமின்றி! படபடப்புடன் இருந்ததாலோ என்னவோ லேசான வியர்வையில் முகம் மினுமினுத்தது. நெற்றியிலிருந்து ஒரே ஒரு வியர்வைக் கோடு காதோரமாய் வடிந்து கன்னத்தில் காணாமல் போனது.

வண்டி ட்ராஃபிக் ஜாம்ல மாட்டீருக்கும் சுமதி. இப்ப வந்திருவான். நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் வேன் சத்தமும் கதவைத் திறந்து கண்ணன் கீழே குதிக்கும் சத்தமும் கேட்டது. சுமதி வாசலுக்கு விரைந்தாள்.

இவ்வளவு நேரம் ஆவலுடன் அவனுக்காகக் காத்திருந்தவள் அவன் வந்ததும் வராததுமாய்த் திட்ட ஆரம்பித்திருந்தாள். “எத்தன தடவ சொல்றேன்..இப்படி வேன்ல இருந்து குதிக்காத குதிக்காதன்னு? மெதுவா எறங்கிவந்தா என்ன இப்போ?” கேட்டுக்கொண்டே அவனை உள்ளே அழைத்துவந்து ஷூ சாக்ஸைக் கழட்ட ஆரம்பித்திருந்தாள். “சட்டையை எப்படி அழுக்காக்கிட்டு வந்திருக்க..டர்ட்டி” “அச்சோ.. இன்னைக்கும் லன்ச் மிச்சம் வச்சிட்டியா..” “இங்கிலிஷ் மிஸ் டெஸ்ட் வெச்சாங்களா, இல்லையா?” இப்படியாகத் தொடரும் சில நிமிடங்கள்.

பார்த்துக் கொண்டிருந்த நான்டேய் கண்ணா, இங்க வா.. இன்னைக்கு என்ன ரைம்ஸ் சொல்லிக் கொடுத்தாங்க, சொல்லு பாக்கலாம்என்று இழுத்து அவனை மடியில் அமர்த்திக் கொண்டேன்.

மைசூர் அப்பளம்

தினமும் நான் கேட்கும் கேள்விக்கு வழக்கமாக அவன் கூறும் பதில்.

புதுசா ஒன்னும் சொல்லித்தரலயாடா உங்க மிஸ்..?”

ஏங்க, அவனோட சிலபஸ் ஷீட் எடுத்துப் பாருங்க. அதுல எல்லாம் கொடுத்திருப்பாங்க. இப்படி சும்மா கேட்டா, அவன் டெய்லி இதையேதான் படிப்பான்ஒரு சிறிய தட்டில் முறுக்கும் பிஸ்கட்டும் அவனுக்காகவே செய்து வைத்திருந்த வாழைப்பூ வடையையும் எடுத்து வந்து வைத்தாள். நாங்கள் பேசிக்கொண்டதை அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. வாய்விட்டு ரைம்ஸைப் பாடத் தொடங்கியிருந்தான்.

மைசூர் அப்பளம்
நெய்யில வறுத்து
சம்பந்திய கூப்பிடுங்க
சாப்பாடு போடுங்க
வெத்தல பாக்கு வையுங்க
வெளியில புடிச்சு
தள்ளுங்க

மழலை மொழியும் சைகை நடனமுமாய் நிஜமாகவே யாரையோ வெளியில் பிடித்துத் தள்ளிவிட்ட வெற்றிச் சிரிப்புடன் அவனது வாயிலிருந்து வந்துவிழுந்த வார்த்தைகள் மனதைப் பறக்கச்செய்தன. உற்சாகத்துடன் நானும் சேர்ந்து அவனுடன் இன்னும் நிறைய பாடல்களைப் பாடத் தொடங்கியிருந்தேன். படிப்பை எல்லாம் முடித்தாகி விட்டவுடன் கொஞ்சமாகப் பசிக்க ஆரம்பித்திருந்தது. மூவருமாக அமர்ந்து இரவு உணவை முடித்தோம்.

நேரம் கடக்கக் கடக்க ஒரு மெல்லிய சோகம் மெதுவாகப் புகுந்து ஆட்கொண்டிருந்தது. சுமதியும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்திருந்தோம். எதையாவது பேச வேண்டுமே என்று நான் யோசித்திருந்த வேளையில், “இன்னைக்கு என் செல்லம் சமத்துக்குட்டியா ரெண்டு இட்லி சாப்பிட்டிருச்சு, என்ன கண்ணாமடியில் அமர்ந்திருந்த அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

காலிங் பெல் சத்தம் கேட்டது. வந்துட்டாங்க போல. நான் சென்று கதவைத் திறந்தேன்.

கண்ணாவா வா.. அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுஉள்ளே வந்தவள் தன்னை நோக்கி ஓடிவந்தவனை வாரி அணைத்துக் கொண்டாள்.

அம்மா.. டாடி எங்க?”

டாடி நம்ம வீட்டுல வெயிட் பண்றார்டா குட்டிமற்றுமொரு முத்தம்.

என்னக்கா.. இன்னைக்குச் சாப்பிட்டானா? சாரி.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இப்பெல்லாம் ஆபீஸ்ல வேலை கொஞ்சம் அதிகம்

இட்லி ஊட்டிவிட்டேன்சுமதி சிரித்து வைத்தாள்.

புத்தகப்பையும் லன்ச் பேகும் இன்னும் சில பொருட்களும் ஃப்ளாட்டின் பக்கத்துப் போர்சனுக்கு இடம் மாறின.

சிரித்துக்கொண்டே கையசைத்துக்குட்நைட்சொல்லிவிட்டுக் கதவை உட்புறமாகத் தாழிட்டு நின்றவளை இழுத்து இறுக்கமாக அணைத்தேன். சுமதியின் வயிற்றுக்குள்ளிருந்து ஏக்கப் பெருமூச்சுடன் பொங்கி வழிந்த எதுவோ ஒன்று சூடாக இறங்கி என் நெஞ்சில் பரவி நனைத்தது. என் அணைப்பு மேலும் இறுகியது.
*

33 comments:

ஜீவன்பென்னி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுபத்ரா நல்லாயிருக்குங்க. படிச்சு முடிக்குறப்போ மனசுல ஒரு வலி. எங்க அத்தை பொண்ணு இருக்காங்க அவங்களுக்கு 12 வருசமா குழந்தை யில்ல. அவங்க நினைப்புதான் வந்துச்சு. அவங்களுக்கு இருக்குற வலிய விட சுத்தியிருக்குறவங்க மூலமா கிடைக்குற வலிதான் ரொம்ப அதிகம்.

ராம்குமார் - அமுதன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கதை... அருமையான நடை....

Chitra said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான கதைங்க... நல்லா எழுதுறீங்க.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹாய் சுபா, ரொம்ப நல்லாயிருக்கு கதை! கதை சின்னதா இருந்தாலும் சொன்னவிதத்துல மிக அழகு! எந்த இடத்திலையும் பிசிறு இல்லாம இருக்கு! நிறைய கதைகள் எழுது சுபா! :)

Rathnavel Natarajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

It is a touhing story.

மாணவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுவாரசியமாகவும் சிறப்பாகவும் எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் சகோ,

பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனசை வலிக்கச் செய்த கதை. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான கதை ......

வாழ்த்துக்கள் .....

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கதை ரொம்ப நல்லா இருக்கு சுபி...

அவள் கணவனின் அணைப்பில் அவளே ஒரு குழந்தையாக மாறி போவாள்..

ஆயிஷா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லா எழுதுறீங்க.வாழ்த்துக்கள்.

dheva said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மெலிதாய் நகரும் கதையில் அவர்கள் உணவருந்தும் போது ஏன் சோகமாகயிருக்கவேண்டும்...என்று தோன்ற வைத்தது....முதல் வெளியில் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும் வரை.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வலி இருந்தது மறுக்க முடியாதது.

மிகாமல் சரியாய் ஒரு உணர்வை புரிய வைத்த கதை...! வாழ்த்துக்கள்!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ ஜீவன்பென்னி
உண்மைதான் சமீர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@ ராம்குமார் - அமுதன்
மிக்க நன்றி!

@ சித்ரா
நன்றி சித்ரா அக்கா..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Bala
Thank you for ur boosting words Bala..!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Rathnavel
Thank you!

@ மாணவன்
மிக்க நன்றி...!

@ சே.குமார்
கருத்துக்கு மிக்க நன்றி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ உலவு.காம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

@ ஜெ.ஜெ
அருமையா சொல்லிட்டே ஜெ.ஜெ. கருத்துக்கு நன்றி!

@ ஆயிஷா
நன்றி தோழி!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ தேவா
நன்றி தேவா சார்...வருகைக்கும் கருத்துக்கும்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உணர்வு பூர்வமாய் அந்த உணர்வை அனுபவிப்பவள் என்பதால் மனதை மிகவும் பாதித்தது இந்த கதை...

//அவங்களுக்கு இருக்குற வலிய விட சுத்தியிருக்குறவங்க மூலமா கிடைக்குற வலிதான் ரொம்ப அதிகம்.//
ஜீவன்பொன்னி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை பொதிந்த வார்த்தை...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிறந்த கதை ஆசிரியர்
விருது கிடைக்க வாழ்த்துக்கள்
வாசிக்க பிடித்த தேர்ந்த வர்ணனைகள்
குழந்தைகள் இல்லாமல் இருக்கும் பெற்றோரின்
தவிப்புகள் அழகாய் வார்த்தைகளில் பரிமாறி இருக்கீங்க.

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

You are AMAZING! good attempt...

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ அப்பாவி தங்கமணி
எதார்த்தமாகத் தோன்றி எழுதியது அக்கா..எழுதும்போது நானும் அந்த உணர்வை அனுபவித்தேன்.
சீக்கிரம் ஒரு குட்டிப் பாப்பா உங்களில் ஜனிக்க இறைவனை வேண்டுகிறேன்.

@ siva
:))))) மிக்க நன்றி.

@ சாதாரணமானவள்
Thank you Dear :)

@ TERROR-PANDIYAN(VAS)
//இது தினம் நடக்கற நிகழ்வுதனே? அதுக்கு ஏன் அவங்க அழனும்?//
இப்படி அழுவது கூட தினம் நிகழும் நிகழ்வாக இருக்கலாம்.
கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா..

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சாப்பிட்டு அஞ்சு நாளாச்சு
அழுத படி ஒரு குழந்தை
கை நீட்டித் துரத்த

ரிஷியின் வேகத்துக்கு
ஒடிக் கொண்டிருந்தாள்
திரும்பிபார்க்கக் கூட இல்லாமல்

எஸ்.ஒன் பக்கத்தில் நின்றதும்
ஏங்க ரிசல்ட் ஒன்னும்
தப்பாருக்காதே என்றாள்

வருகிறது வரட்டும் வா
எதிர் நிச்சலடிப்போம்
குறை என்றாலுமே கூட

சட்டென்று திரும்பி
அந்தக் குழந்தையை வாரி
எடுத்து அனைத்தாள்

குட் டே வாங்க ஓடினான்
முதலாவது பளாட்பாரத்தில்
இவர்களை விட்டு விட்டு


ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் தடதடத்தது

Ananthi (அன்புடன் ஆனந்தி) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல எழுதி இருக்கீங்க சுபா.. எனக்கும் அந்த வலியின் வலிமை தெரியும்.. என்பதால்.. இன்னமும் கதையை ஆழமாய் உணர்ந்தேன்..

தொடர்ந்து எழுதுங்க..! வாழ்த்துக்கள்..!

R.Gopi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுபத்ரா....

உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...

முடிவை வேறு மாதிரி யூகித்து இருந்தேன்...

ஆனால், அழகாக அது மாறியது நன்றாக இருந்தது...

ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருந்தது...

வாழ்த்துக்கள் சுபத்ரா....

செல்வா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடைசி வரைக்கும் நான் அது அவுங்க குழந்தை அப்படின்னே நினைச்சிட்டேன் ..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@R.Gopi

மிக்க நன்றி கோபி அண்ணா.. :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@கோமாளி செல்வா

ம்ம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வா..

Harini Resh said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உணர்ச்சிபூர்வமா இருந்தது...

kalakkal ma :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Harini Nathan
Thank u Harini :)

சாம் ஆண்டர்சன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

குழந்தை பெத்துக்கிட்டு தான் சந்தொஷமா இருக்கனும்னு இல்லிங்க.... உஙகள்யெ குழந்தை மாதிரி பாத்துக்க ஒருத்தர் இருக்கும் பட்சத்தில்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் பரிசு - பதிவு: நாமிருவர்
பதிவர்: சுபத்ரா

muthalla sonnathu nan than. enakku eppo treat? nan gujarat varumpodhu enakku oru gurathi meals ok

kartiq roshan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

super my best wshz

சீனு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தொய்வில்லாமல் சென்ற மிக அருமையான கதை.. கதையில் இருந்த கடைசி ட்விஸ்ட் சற்றும் எதிர்பாராதது... முதல் பரிசு பெற முற்றிலும் தகுதியான ஒரு படைப்பு

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எதிர்பாராத முடிவு! தெளிவானநடை! அருமையான சிறுகதை! வாழ்த்துக்கள்!