தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் – இந்த நான்கு திராவிட மொழிகளுக்குள் இன்றும் ஏறத்தாழ ஐந்தாயிரம் சொற்கள் பொதுவாக உள்ளன! இலக்கணக் கூறுகள் பல பொதுவாக உள்ளன. சமஸ்கிருத மொழியின் கலப்பால் ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பே கன்னடமும் தெலுங்கும் தமிழ் மொழியிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டன. ஆனால் மலையாளமும் தமிழும் அவ்வளவு மிகுதியாக வேறுபடவில்லை. கேரளத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் அதிகமாயிற்று. அதற்குமுன் தமிழ் அங்கே ஆட்சி மொழியாகவும் கலைமொழியாகவும் இருந்து வந்தது. கேரள நண்பர்கள் மலையாளம் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? கூர்ந்து கவனித்தால் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்து பேசுவது தான் மலையாளம் எனத் தோன்றும் :-) பதினைந்து நூற்றாண்டுகளுக்குமுன் ஆண்டுவந்த சேர மன்னர்கள் ‘தமிழ்’ அரசர்கள். அதற்குப் பிறகு பாண்டிய அரச மரபைச் சார்ந்த தமிழ் அரசர்களே ‘பெருமான்கள்’, ’பெருமக்கன்மார்’ என்ற பெயரோடு அங்கே பத்தாம் நூற்றாண்டுவரையில் ஆண்டுவந்தார்கள். தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்டபோது தலைவராக இருந்த ‘ திருவிதாங்கூர்த் தமிழ்ப்புலவர்’...