முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆச்சி மசாலாவின் நீயா நானா




இன்று விஜய் தொலைக்காட்சியில்நீயா நானாநிகழ்ச்சியைப் பார்த்தேன். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றிய சூடான விவாதம் ஓடிக்கொண்டிருந்தது. எந்த எந்தச் சூழ்நிலைகளில் பெண்கள் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற கேள்வியைத் தொடர்ந்து, இது போன்ற வன்முறைகளுக்குக் காரணம் முழுக்க ஆண்கள் தானா? இல்லை பெண்களும் காரணமா?

பெண்கள் கவர்ச்சியாக உடை உடுத்துவதால் தான் பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவா? அப்படியென்றால் ஒன்றரை வயதுக் குழந்தை, நான்கு வயதுக் குழந்தை என வயது வரம்பின்றி கற்பழிப்பு மற்றும் கொலைச் சம்பவங்கள் நடப்பதற்கு என்ன காரணம்? எனப் போய்க் கொண்டிருந்தது.

பின்னர் பாலியல் வன்முறைக் குற்றவாளிகள் எப்படித் தண்டிக்கப்பட வேண்டும் எனப் பேச வந்தவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது ஒவ்வொருத்தரும் விதவிதமான தண்டனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். திடீரென Capital Punishment வேண்டுமா வேண்டாமா எனக் கேட்டார் கோபிநாத். அதற்கும் கலவையான பதில்கள்..

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் போக, இன்றைய highlight என்னவென்றால், வந்திருந்த VIPs. டாக்டர் ஷாலினி, குட்டி ரேவதி, சல்மா, கவின்மலர், சுமதி போன்றோர் வந்திருந்ததால் விவாதம் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. முக்கியமாக Capital Punishment  பற்றிய விவாதம். முழுக்க பெண்களே கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கோபிநாத் கூட மிகக் குறைவாகவே பேசினார். நிகழ்ச்சி நன்றாகத் தான் இருந்தது..

இடையிடையே இந்நிகழ்ச்சியை வழங்கும் ஆச்சி மசாலாவின் விளம்பரம் வந்ததைத் தான் காணச் சகிக்கவில்லை. ஒரு கணவனும் மனைவியும் இரட்டை அர்த்தத்தில்தொட்டுக் கொள்ளவாஎன ஒரு மார்க்கமாகப் பாடிவிட்டு ஆச்சி ஊறுகாயைக் காட்டுகின்றனர். விளம்பரத்தில் அந்தப் பெண் பேசும் finishing dialogue அதைவிடவும் மோசம். எனக்குத் தான் இப்படித் தோன்றியதா என்று பார்த்தால் என் அறைத் தோழிகளும் அவர்களாகவே அதைப் பற்றிப் பேசி முகம் சுழித்துக் கொண்டனர்.

பண்பாடு, கலாசாரம் என எல்லாவற்றையும் பேசும் இது போன்ற நிகழ்ச்சியின் ஊடாகவே குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க முடியாதவாறு செய்யும் இவை போன்ற விளம்பரங்கள்! கோபிநாத் இவற்றையும் கண்டு கொள்வாரா?

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Mr.Gobinath... For ur Consideration.....
புரட்சி தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த நிகழ்ச்சியை வழக்குவதே ஆச்சி மசாலாதான். அப்புரம் எப்படி?
பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
விளம்பரங்களுக்கு சென்ஸார் கிடையொது. அவற்றால் குடும்பத்துடன் பார்ப்பவர்களுக்கு எழும் சங்கடங்களை எவரும் கண்டுகொள்வதுமில்லை.
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தும் பணம் செய்யும் மாயை...!
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
பணம் படுத்தும் பாடே விளம்பரங்கள்...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
Thank U Anonymous :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@புரட்சி தமிழன்

ஆம். இரட்டை அர்த்தங்களில் விளம்பரம் செய்யும் மோகம் ஆச்சி மசாலாவையும் விட்டுவைக்கவில்லை
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பால கணேஷ்

விளம்பரங்களுக்கும் சென்ஸார் போர்ட் இருந்தால் நன்றாக இருக்கும்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சே. குமார்

விளம்பரங்கள் சமூகச் சீரழிவுக்கு வித்திடாமல் இருந்தால் நன்று..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...