இன்று விஜய் தொலைக்காட்சியில் “நீயா நானா” நிகழ்ச்சியைப் பார்த்தேன். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றிய சூடான விவாதம் ஓடிக்கொண்டிருந்தது. எந்த எந்தச் சூழ்நிலைகளில் பெண்கள் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற கேள்வியைத் தொடர்ந்து, இது போன்ற வன்முறைகளுக்குக் காரணம் முழுக்க ஆண்கள் தானா? இல்லை பெண்களும் காரணமா?
பெண்கள் கவர்ச்சியாக உடை உடுத்துவதால் தான் பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவா? அப்படியென்றால் ஒன்றரை வயதுக் குழந்தை, நான்கு வயதுக் குழந்தை என வயது வரம்பின்றி கற்பழிப்பு மற்றும் கொலைச் சம்பவங்கள் நடப்பதற்கு என்ன காரணம்? எனப் போய்க் கொண்டிருந்தது.
பின்னர் பாலியல் வன்முறைக் குற்றவாளிகள் எப்படித் தண்டிக்கப்பட வேண்டும் எனப் பேச வந்தவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது ஒவ்வொருத்தரும் விதவிதமான தண்டனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். திடீரென
Capital Punishment வேண்டுமா வேண்டாமா எனக் கேட்டார் கோபிநாத். அதற்கும் கலவையான பதில்கள்..
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் போக, இன்றைய highlight
என்னவென்றால், வந்திருந்த VIPs. டாக்டர் ஷாலினி, குட்டி ரேவதி, சல்மா, கவின்மலர், சுமதி போன்றோர் வந்திருந்ததால் விவாதம் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. முக்கியமாக Capital Punishment பற்றிய விவாதம். முழுக்க பெண்களே கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கோபிநாத் கூட மிகக் குறைவாகவே பேசினார். நிகழ்ச்சி நன்றாகத் தான் இருந்தது..
இடையிடையே இந்நிகழ்ச்சியை வழங்கும் ஆச்சி மசாலாவின் விளம்பரம் வந்ததைத் தான் காணச் சகிக்கவில்லை. ஒரு கணவனும் மனைவியும் இரட்டை அர்த்தத்தில் “தொட்டுக் கொள்ளவா” என ஒரு மார்க்கமாகப் பாடிவிட்டு ஆச்சி ஊறுகாயைக் காட்டுகின்றனர். விளம்பரத்தில் அந்தப் பெண் பேசும்
finishing dialogue அதைவிடவும் மோசம். எனக்குத் தான் இப்படித் தோன்றியதா என்று பார்த்தால் என் அறைத் தோழிகளும் அவர்களாகவே அதைப் பற்றிப் பேசி முகம் சுழித்துக் கொண்டனர்.
பண்பாடு, கலாசாரம் என எல்லாவற்றையும் பேசும் இது போன்ற நிகழ்ச்சியின் ஊடாகவே குடும்பத்தோடு அமர்ந்து
தொலைக்காட்சி பார்க்க முடியாதவாறு செய்யும் இவை போன்ற விளம்பரங்கள்! கோபிநாத் இவற்றையும் கண்டு கொள்வாரா?
கருத்துகள்
ஆம். இரட்டை அர்த்தங்களில் விளம்பரம் செய்யும் மோகம் ஆச்சி மசாலாவையும் விட்டுவைக்கவில்லை
விளம்பரங்களுக்கும் சென்ஸார் போர்ட் இருந்தால் நன்றாக இருக்கும்
ஆமாம்..
விளம்பரங்கள் சமூகச் சீரழிவுக்கு வித்திடாமல் இருந்தால் நன்று..