There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

Reiki and Pranic Healing

Mar 13, 2013


 உங்கள் எல்லாருக்கும் Reiki (or) Pranic Healing பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள்  வருத்தப்பட வேண்டாம் :) நான் சொல்கிறேன்.. தெரிந்தவர்கள், “Reiki-யும் Pranic Healing-ம் ஒன்றா?” என்ற கேள்வியை என்னிடம் முன்வைக்கலாம். அதற்கும் உண்டான பதிலை நானே சொல்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய புரிதலின் பேரில் பதிவு செய்வதே!

ரெய்கி என்றால் என்ன? அது ஒரு வகையான சிகிச்சை முறை. இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

நமக்குக் கண்ணுக்குத் தெரிவது எலும்பு, சதை, ரத்தம், நரம்புகளால் ஆன உடல் மட்டுமே. நம் ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் சூட்சும உடல் ஒன்று இருக்கிறது. அது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. பொதுவாகப் பொருள் என்பது Solid, Liquid அல்லது Gas நிலையில் இருக்கும். இந்தச் சூட்சும உடம்பானது Plasma என்னும் நேர் மற்றும் எதிர்மறை அயனிகளால் (Positive and Negative Ions) ஆன ஒரு (நான்காம்) நிலையில் உள்ளது.  உடல் திசுக்களின் செல்களில் இருக்கும் அந்த ப்ளாஸ்மா வேறு; இது வேறு. இந்தச் சூட்சும உடம்பிற்கு Etheric body, Energy body, Bio-Plasmic body எனப் பல பெயர்களை வைத்து வழங்குகின்றனர். நம் உடலில் இருக்கும் ரத்த நாளங்களைப் போல இந்த energy body-யிலும் ஆற்றல் பாதைகள் (energy channels or meridians) இருக்கும்.

இந்தச் சூட்சும உடம்பானது நமது மெய்யுடலைச் சுற்றி ஒரு 4-5 inches கவர்ந்தவாறு கோழி முட்டை வடிவில் இருக்கும்.  நம் உடலின் எந்தப் பாகத்தில் நோய் வருவதாக இருந்தாலும் இந்த energy body-யை முதலில் தாக்கிவிட்டு அதன் பின்னர் தான் நம் உடலில் தாக்கத்தைக் காட்டும். அதே போல, நம் உடலில் வெட்டு போன்ற காயங்கள் ஏற்படும் போது இந்த energy body-யிலும் மாற்றங்கள் தெரியும். எனவே இந்த energy body-க்கு ஆற்றல் கொடுப்பதன் மூலம் நோயிற்கான சிகிச்சையை நாம் துரிதப்படுத்த முடியும்


சரி, இந்த ஆற்றலை நாம் எங்கிருந்து பெறுவது? இதென்னடா வேண்டாத வேலை.. பெட்ரோல் டீசல், CNG (fuel) மாதிரி இதற்கும் ஆற்றல் தேவையா என்று பயப்பட வேண்டாம். இந்த ஆற்றலை (energy) நாம் இயற்கையிடமிருந்தே பெறலாம். அதாவது பிரபஞ்சத்திடமிருந்து. சூரியன், காற்று, மரங்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அலைகளைப் பெற்று உடம்பில் சிகிச்சை தேவைப்படும் இடத்துக்குச் செலுத்துவது தான் இக்கலை. சரி இதற்கு ஏதேனும் கருவி தேவையா? இல்லை. இதெற்கென மருந்து? இல்லை. சிகிச்சை அளிப்பவர் ஒருவர் இருந்தால் மட்டும் போதும். உலகின் எந்த மூலையில் இருப்பவரும் எந்த மூலையில் இருப்பவருக்கும் Distant Healing முறையில் கூட சிகிச்சை அளிக்கலாம்.

இவ்வளோ நேரம் சீரியஸா கேட்டுட்டு இருந்தோம்.. இப்போ தான் தெரியுது இது ஒரு கப்சானுஎன்று சொல்பவர்கள் இப்பொழுதே அப்பீட் ஆகிக் கொள்ளலாம். மாறாக இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அதிசயமாக இதை எண்ணுபவர்களும் தீராத நோயினால் அவதிப்படுபவர்களும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் இருப்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம். Common Cold, Fever, Headache, Diabetes, High BP, High Cholestrol, Heart Problems, Thyroid போன்ற Hormone Problems, Kidney Problems, Migraine, Tonsillitis, Sinusitis, STD, Leprosy, Cancer போன்ற எல்லா விதமான நோய்களுக்கும் தனியாகவோ, மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து supplement ஆகவோ Pranic Healing சிகிச்சை செய்யலாம். இது சிகிச்சை முறையைத் துரிதப்படுத்தும் catalyst (ஊக்கி) ஆகப் பயன்படுகிறது.

Rei என்றால் Universal; Ki என்றால் Life Energy or Prana (நம்முடைய மொழியில்). இதைத் தான் Reiki என்றும் Pranic Healing என்றும் சொல்கின்றனர். இரண்டு கலைகளும் ஒன்று தான். ஆனால் இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் சில minor வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. Reiki-இல் ஆற்றல் அளிப்பதை (energizing) மட்டுமே முக்கியமாகக் கொள்கின்றனர். Pranic Healing-இல் முதலில் ஆற்றல் மையங்களைச் (Energy Chakras) சுத்தம் செய்வது (Cleansing), பின் ஆற்றல் அளிப்பது, சிகிச்சை அளிப்பவர் சிகிச்சை பெறுபவரிடம் இருந்து நோய் () தீய ஆற்றல் தனக்குப் பரவாமல் பார்த்துக் கொள்வது போன்ற வரிசை முறையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர்.


 எனது கல்லூரி நாட்களில் தூத்துக்குடி சென்று Pranic Healing கற்றுக்கொள்ள விரும்பினேன். முடியாமல் போகவே பின்னர் பரோடாவில் Reiki கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்த போது Grand Master Haren Patel அவர்களிடமிருந்து Reiki – Basic Level மற்றும் இரண்டாவது நிலையையும் (Distant Healing) கற்றுக் கொண்டேன். பெர்சனலாக இதனால் நான் நன்மை அடைந்ததால் தான் இவ்வளவு எழுதுகிறேன்..

புதிதாகக் கற்க விரும்புகிறவர்கள் Pranic Healing வகுப்பிற்குப் போகலாம்.  ஒவ்வொரு நிலைக்கும் தலா இரண்டு நாட்கள் தான். அற்புதமான, வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்.. அதன் பிறகு உங்கள் வாழ்க்கையே மாறிப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதைப் பற்றிப் பேசச் சொன்னால் பேசிக்கொண்டே இருப்பேன்.. அதனால் இப்போது இதோடு நிறுத்திக் கொண்டு இன்னொரு பதிவில் மீண்டும் தொடர்கிறேன்.

PS: ஏதேனும் சந்தேகம் இருந்தால் comment செய்யவும்.

(தொடரும்...)

9 comments:

Madasamy said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுபத்ரா,

நான் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கு தெரியாத நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.

இந்த பதிவில் எனக்கு ஒரு கேள்வி,

பிரணாயமா பயிற்சிக்கும், Reiki and Pranic Healing க்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ அரசன் சே

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு நன்றி..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Madasamy

எனது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் மிக்க மகிழ்ச்சி :-)

/பிரணாயமா பயிற்சிக்கும், Reiki and Pranic Healing க்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?/

Pranayama-வை ஒரு வகை Pranic Healing என்று கூட சொல்லலாம். ப்ராணாயமா பயிற்சியில் "Life Energy" ஆன "Prana" வை உள்ளிழுத்து நமக்கு நாமே சக்தியூட்டிக் கொள்கிறோம். Pranic Healing-இல் அந்தச் சக்தியை நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் கொடுக்கிறோம். "Prana" கடந்து செல்கிற "Energy Channel" ஆக நாம் செயல்படுகிறோம்.

Pranic Healing - இல் வருகிற 'Prana'-வும் 'Pranayama'வில் வருகிற 'Prana'-வும் ஒன்றே :-)

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சுபத்ரா

:-)

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Anonymous

:)

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விளைவு ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு மாஸ்டர்களும் ஒவ்வொரு விதமாக தான் சொல்லி தருகிறார்கள் சுபத்ரா. ரெய்கியை பொறுத்தவரை நாம் நோயாளியை தொடத் தேவை இல்லை. ஆனால் ப்ரானிக் ஹீலிங்கில் நோயாளியை தொடவேண்டும் தானே?

Siva Yogi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தாங்கள் கதைப் பிரிவு முதல் பரிசு (டெரர் கும்மி விருதுகள்) பெற்றுள்ளதுக்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சாதாரணமானவள்

இல்லை.. ப்ராணிக் ஹீலிங்கிலும் தொட்டுப் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. [அப்படியே தொட்டாலும் பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றனவே] :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Siva Yogi

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரில :)